MyAgileVps
Latest Post in Puthiya Sarithiram

+2 Results for 2013

Written By Unknown on Saturday 27 April 2013 | 03:04


+2 results,plus two results ,12th  results.

 http://tnresults.nic.in/


 


 http://tnresults.nic.in/





http://tnresults.nic.in/

Google Chrome Keyboard Shortcuts

Written By Unknown on Friday 26 April 2013 | 23:38

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts


Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம். 
  • Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய
  • Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய
  • Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.
  • Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
  • Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
  • Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல
  • Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல
  • Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல
  • Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.
  • Ctrl+W or Ctrl+F4 தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய.
  • Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல
  • Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
  • Alt+Home Home Page க்கு செல்ல
  • Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
  • Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
  • Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய
  • Ctrl+J Downloads page – ஐ ஓபன் செய்ய
  • Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய
  • F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
  • Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய
  • Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய
  • F1 Help Center – ஐ ஓபன் செய்ய
  • Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய
  • Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
  • Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
  • F5 or Ctrl+R Refresh செய்ய
  • Esc Loading – ஐ நிறுத்த
  • Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய
  • Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
  • Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
  • Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
  • F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
  • Space bar பக்கத்தை Scroll down செய்ய
  • Home பக்கத்தின் Top க்கு செல்ல
  • End பக்கத்தின் Bottom க்கு செல்ல

QR Code என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?

QR Code என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?

QR Code என்றால் என்ன? 

QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலக நாட்டினர் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாகும்.

Bard code & QR code

Bar Code பற்றிய நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்போம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியே QR Code ஆகும்.

QR Code-ம் பயனும்: 

  1. QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் (Encode) செய்யப்பட்டு ஒரு  படமாக கிடைக்கும். 
  2. அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 
  3. நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும். 
  4. அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து (டீகோட் Decode)செய்து , அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும்.
  5. உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும், இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி, மீண்டும் தேவையானபோது Decode  செய்து பெற முடியும்.

QR Code Image - ல் என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த முடியும்.?

QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், வலைத்தள முகவரிகள், SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data க்களை QR Code படமாக மாற்ற முடியும்.

QR Code Image - ஐ உருவாக்குவது எப்படி? 

QR Code Image -ஐ உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய இணையதளங்கள் (Online QR Code Websites) உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு தளத்திற்கு சென்று நீங்கள் உருவாக்க விருக்கும் இணைப்பு அல்லது தகவல்களை அதில் உள்ளிட்டு, QR Code Image - இமேஜைப் பெற முடியும். இது முற்றிலும் இலவசமே..

QR Code Image உருவாக்க இலவச மென்பொருள்களும் உள்ளன. அம்மென்பொருளைப் பயன்படுத்தியும் QR Code Image ஐ உருவாக்கம், QR Code Image -ல் உள்ளதை Decode செய்து படிக்கவும் முடியும்.

QR Code உருவாக்கப் பயன்படும் மென்பொருள்: 

1. Download QR Code Generator Software
2. Download QR Code Generator Software
3. Download QR Code Generator Software

உடனடியாக Online-ல் QR Code உருவாக்கப் பயன்படும் இணையதளங்கள்:

1. http://createqrcode.appspot.com/
2. http://keremerkan.net/qr-code-and-2d-code-generator/
இதுபோன்று நிறைய இணையத்தளங்கள் உள்ளன.

உருவாக்கப்பட்ட QR Code - ஐ Decode  செய்து தகவலைப் படிப்பது எப்படி? 

இதற்கு QR Code Reader என்ற மென்பொருள் பயன்படுகிறது. இணையத்தில் QR Code Reader வலைத்தளங்களும் உள்ளன.

இந்த தளத்திற்குச் சென்று http://www.onbarcode.com/scanner/qrcode.html உங்களுடைய QR Code Image - உள்ளிட்டு, அதில் உள்ள தகவல்களைப் பெற முடியும்.

QR Code Reader மென்பொருள் (Software) மூலமும் QR Code Image உள்ளவற்றை படித்து அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இம்மென்பொருளைப் பயன்படுத்தி QR Code உருவாக்க முடியும். உருவாக்கிய QR Code Image - படிக்கவும் முடியும்.

விண்டோஸ் கணினிக்கான மென்பொருள் இது. மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய.. இங்கு செல்லவும்.
qr code generating software

Change Windows7 Log-On Screen Back Ground,,,,!!!

Written By Unknown on Wednesday 3 April 2013 | 23:30

Easy way to Change Windows7 Log-On Screen Back Ground,,,,!!!






 
If you do not like the Windows 7 login screen, you can change it as shown above by trying this simple hack.
Here is how you can do it.

1. Launch the Windows Registry Editor by typing Regedit in Start Menu

2. Go to ‘HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\Log ​​onUI\Background‘.

3. Double-click the DWORD value called ‘OEM Background’ to open it and enter 1 in the Value data field.

Note: If the DWORD ‘OEM Background’ is not there, you need to make it.

4. Browse to the background image that you would like
use on the log-in screen. A JPEG file that is less than 245 kb in size can only be used here.
 
5. Copy the image you want to use into the ‘%windir%\system32\oobe\info\backgrounds‘ folder. If the folder is not present, you need to create it.
6. Rename the image to backgroundDefault.jpg

7. Restart your computer to check the new login background screen.

Port Numbers










நேர்கானல்களில் அதிகம் கேட்க்கப்படும் கேள்வி.
தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய Well known Port Numbers
Telnet 23
FTP 21
SMTP 25
Gopher 70
TFTP 69
Finger 79
HTTP 80
LDAP 389
SNMP 161
IRC 194
SQL 1433
UUCP 540
whois 43
NNTP 88
Kerbores 119

லினக்ஸ் வழங்கல்கள் (Linux Distribution)

லினக்ஸின் கருவை அடிப்படையாக கொண்டு மக்களின் எளிய பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் இயங்குதளங்கள் அனைத்தும் லினக்ஸ் வழங்கல்கள் என்று அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே சொன்னது போல் லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதனால் உலகெங்கும் இருக்கும் லட்சகணக்கான நிரலாளர்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக பலவிதமான மென்பொருள்களை வடிவமைத்து லினக்சை மேலும் மேலும் மெருகேற்றுகின்றனர்.
தொடக்க காலத்தில் ஒருவர் லினக்சை பயன்படுத்த வேண்டுமென்றால், யூனிக்ஸ் தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறிய மென்பொருளை நிறுவுவதற்கு, அதற்கு தேவையான கோப்புகளை எங்கே விப்பது,எத்தனை கட்டளைகளை இயக்க வேண்டும், இதற்கான நிரலை எங்கிருந்து இயக்கவேண்டும் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.
இதனால் லினக்ஸ் பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து சற்று விலகியே இருந்தது.
இலவசமாக கிடைக்கும் இந்த லினக்சை சாதரன மக்களும் எப்படி நிறுவுவது,பயன்படுத்துவது என்று எண்ணிய போதுதான் இந்த வழங்கல்கள் என்ற எண்ணக்கரு உருவானது என்று சொல்லலாம்.

தொடக்ககாலத்தில் உருவான வழங்கல்கள்:
MCC Interim Linux-இது 1992 ஆம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலை கழகத்தால் வெளியிடப்பட்டது.
1992-ல் SLS (Soft Landing Linux System) என்ற வழங்கலை A&M பல்கலை கழகத்தை சேர்ந்த ஒருவரால் வெளியிடப்பட்டது மேற்கண்ட எந்த வழங்கல்களும் சரியாக பராமரிக்கப்படாத்தால் பாதியிலே கைவிடப்பட்டது.
ஆனால் திரு.பேட்ரிக் வால்கர்டிங்(Patric Volkerding) என்பவர் SLS–யை அடிப்படையாகக் கொண்டு ஸ்லாக்வேர் என்ற வழங்கலை உருவாக்கினார்.இதுவே இன்றுவரை தொடர்ந்து வரும் மூத்த லினக்ஸ் ஆகும்.
தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட லினக்ஸ் வழங்கல்கள் உலகெங்கும் கிடைக்கின்றன.இதைப்பற்றி மேலும் தகவல்கள் அறிய கீழ்கண்ட இணையதளத்தை பார்வையிடவும்.
http://www.linux.org/dist
இப்போது பலராலும் பய்ன்படுத்தப்படும் லினக்ஸ் வழங்கல்களில் சில

பெஃடோரா (Fedora)
ரெட் ஹாட் (RedHat)
சுசே (Suse)
மாண்ட்ரிவா (Mandriva)
டெபியன் (Debian Linux)
உபுண்டு (Ubendu Linux)
நாப்பிக்ஸ் (Knoppix)
மற்றும் பல ...

டெபியன் லினக்ஸ்:இது டெபியன் ப்ராஜெக்ட் என்ற அமைப்பு மூலம் வெளியிடப் படுகிறது.இது 1993 –ம் ஆண்டு திரு.இயன்மர்டாக்(Ian Murdock) என்பவரால் முதலில் தொடங்கப்பட்டது.
DEBIAN என்பதில் DEB என்பது அவரது மனைவி பெயரான Debra என்பதிலிருந்தும் IAN என்பது அவரது பெயரிலிருந்தும் எடுத்த சொல்லாகும்.
இது முழுதும் இலவசமாக கிடைக்ககூடிய இயங்குதளமாகும்.
இதில் நிறுவப்படும் மென்பொருள்கள் dpkg என்ற மாதிரியில் இருக்கும்.dpkg என்றால் Debian Package என்பதன் சுருக்கம் ஆகும்.இதற்கு உலகெங்கும் லட்சக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால் இந்த டெபியன் லினக்சிற்கு 15,000 க்கும் அதிகமான இலவச மென்பொருள்கள் கிடைக்கின்றன.டெபியன் லினக்சை பதிவிறக்கம் செய்ய என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

உபுண்டு லினக்ஸ்இது டெபியன் லினக்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளம்.இதில் பயன்படுத்தப்படும் எல்லா மென்பொருள்களும் க்னூ-வின் கட்டற்ற மென்பொருள் ஆகும்.இதன் புதிய பதிப்பு ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் உபுண்டு பதியப்பட்ட குறுவட்டுகளை (சி.டி) தபால் மூலம் பெறுவதற்கு நாம் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.இதற்கு திரு.மார்க் ஷட்டில்வர்த்(Mark Shuttle Worth) என்பவருடைய கனோனிகல்(Cononical Ltd) நிறுவனம் உதவுகிறது.இவை மேல்மேசை மெற்றும் மட்க்கணினிகளுக்கு சிறப்பான் ஆதரவை வழங்குகின்றது.
உபுண்டு என்ற ஆப்பிரிக்க சொல்லுக்கான் பொருள் மானுட நேயம் ஆகும்.உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய்மொழியில் இலவசமாக கிடைக்க கூடிய இயங்குதளமாக இது அமையும்.
உபுண்டு தவிர கே உபுண்டு,எக்ஸ் உபுண்டு,எடுபுண்டு,கோபுண்டு என பதிப்புகளில் வெளிவருகிறது.உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் லினக்ஸ் வழங்கல் இதுவாகும்.
உபுண்டு லினக்ஸ் சி.டி-யை இலவசமாக பெற...
உபுண்டு லினக்சை நிறுவும் கையேடு-தமிழில்
கேஉபுண்டு லினக்சை நிறுவும் கையேடு-தமிழில்

நாப்பிக்ஸ் லினக்ஸ்இதுவும் டெபியன் லினக்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளம்.இதன் சிறப்பு என்னவென்றால்,இது நேரலை குறுவட்டு (Live CD) லினக்ஸ் ஆகும்.அதாவது உங்கள் கணினியில் நிறுவாமல் தற்காலிகமாக லினக்சை பயன்படுத்தி பார்க்கமுடியும்.மேலும் விளக்கமாக கூற வேண்டுமானில், கணினியின் வன்தட்டில் லினக்சை நிறுவாமல் இந்த குறுந்தகடு மூலம் கணினியை பூட் செய்து தற்காலிகமாக லினக்சை பயன்படுத்திக்கொள்ளலாம்.தேவையில்லை என்றால் குறுந்தகடை எடுத்து நம் வன்தகட்டிலிருந்து பூட் செய்துகொள்ளலாம்.இந்த லினக்சை பதிவிறக்கம் செய்ய http://www.knoppix.org
என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

ரெட் ஹாட்/பெஃடோரா லினக்ஸ்:
ரெட் ஹாட் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இதன் ஒன்பதாவ்து பதிப்பிற்க்கு பிறகு 2003-ம் ஆண்டு இது இரண்டு பிரிவானது.1. பெஃடோரா லினக்ஸ் 2. ரெட் ஹாட் லினக்ஸ்.
பெஃடோரா(Fedora) குழுமம் லினக்சை வடிவமைத்து வெளியிடுகிறது.இதற்கு ரெட் ஹாட் நிறுவனம் உதவுகிறது.இந்த பெஃடோரா லினக்ஸ் வீடு மற்றும் சிறிய அலுவலக பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்படுகிறது.
ரெட் ஹாட் லினக்ஸ் பெஃடோராவை அடிப்படையாக கொண்டு சர்வர் கணினிகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் லினக்ஸ் ஆகும்.இதை ரெட் ஹாட் என்டர்ப்ரைஸ் லினக்ஸ் (RedHat Enterprise Linux) என்பர்.இதன் உரிமம் இலவசமாக கிடைக்காது. விலை கொடுத்து வாங்கவேண்டும்.
பெஃடோரா லினக்சை நிறுவும் கையேடு – தமிழில்..

சூசே லினக்ஸ்:
இதுவும் ஒரு புகழ்பெற்ற லினக்ஸ் வழங்கள் ஆகும். SUSE என்பது Software and Systems Entwicklung என்ற ஜெர்மனி சொல்லிலிருந்து வந்தது.இதற்கு தகுந்த ஆங்கில சொல் Software and System Development. இப்போது இந்த சூசே லினக்ஸ் நாவல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.ரெட் ஹாட்-ல் உள்ளது போல் மேல்மேசை கணினிகளுக்கு என்று ஒரு இலவச வெளியீடும் பெரிய அலுவலக கணினிகளுக்கு விலை கொடுத்து வாங்ககூடிய வெளியீடுகளும் உள்ளது.சான்றாக சூசே லினக்ஸ் என்டர்ப்ரைஸ்
சூசே கணினிகளின் வன்பொருள் மற்றும் மென்பொருள்களை மேலாண்மை செய்ய Yast என்ற மென்பொருள் கருவி பயன்படுத்தப்படுகிறது.
http://www.novell.com/linux/

மாண்ட்ரிவா லினக்ஸ்இதன் பழைய பெயர் மாண்ட்ரேக்(Mandrake) ஆகும்.1998-ம் ஆண்டு பிஃரான்சில்(France) ரெட் ஹாட் லினக்சை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்ட லினக்ஸ்.இதிலும் ரெட் ஹாட் போல் மேல்மேசை கணினிகளுக்கு என்று ஒரு இலவச வெளியீடும் பெரிய அலுவலக கணினிகளுக்கு விலை கொடுத்து வாங்ககூடிய வெளியீடுகளும் உள்ளது.இதில் உள்ள (Smart Package Manager) மற்ற லினக்ஸ் வழங்கல்களின் மென்பொருள்களை ஆதரித்து நிறுவும் திறனுடையது.
அதாவது ரெட் ஹாட் என்றால் rpm மாதிரி மென்பொருள்கள், டெபியன் என்றால் dpkg மாதிரி மென்பொருள்கள்,இவை அனைத்தையும் இது ஆதரிக்கும்.அது மட்டுமல்லாமல் Mandriva Control என்ற கருவியின் மூலம் கணினியின் வன்பொருள்/மென்பொருள்களை மேலாண்மை செய்ய முடியும்.

http://www.mandriva.com/

HY-BRID Hard Disk

ஹைப்ரிட் ஹார்டு டிஸ்க் (HY-BRID Hard Disk)

வணக்கம் நண்பர்களே,


இடத்தை அடைதுக்கொள்ளாத அதி  நவீன  "ஹைப்ரிட்" ஹார்டு டிஸ்க் தயாரிக்கப்பட்டுவிட்டது.

கணினியில்  அதிகப்படியான தகவல்களை சேமித்து வைத்து பயன்படுத்த அத்யவிசயமனது ஹார்டு டிஸ்க். கணினியின் பாகங்களில் ஹார்டு டிஸ்க் சற்று பெறியதாக இருக்கும்.
சிறிய அளவிலான பென்ட்டிரைவ்கள் அதிகமான GB மெமரி திறனுடன் வெளிவந்த பின்னறும், ஹார்டு டிஸ்குகள் மட்டும் அதிக இடத்தை அடைதுக்கொண்டிருந்த்தது.
இப்போது அதன் அளவினை சுருக்கி 5.5மி.மீ. தடிமன் கொண்ட மிக மெலிதான "ஹார்டு டிஸ்க் " ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.
சிங்கபூரை சேர்ந்த "Data Storage Institute" நிறுவனம், இந்த புதிய, நவீன ஹார்டு டிஸ்க்கை வடிவமைத்துள்ளது. இந்த  வகையான ஹார்டு டிஸ்க்ற்கு "A Drive" என்று பெயர் சூட்டி உள்ளனர்.
இந்த நிறுவனத்தை D.S.I என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம்  கடந்த 20 ஆண்டுகளாக டேட்டா ஸ்டாரேஜ் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆய்வுகளின்  பயனாக 2.5" தடிமன் கொண்ட ஹார்டு டிஸ்கின் அளவை 5 (mm)மில்லிமீட்டர் தடிமனுக்குள் அடக்கி விடும் நவீன தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது.

தொழில்நுட்பம் மின்னணு  கருவிகளின் அளவினை சுருக்குகின்றது...!

நன்றி  நண்பர்களே....!

ஒரே கணினியில் லினக்ஸ் மற்றும் விண்டோஸ்XP -யை நிறுவுவது எப்படி?

ஒரே கணினியில் லினக்ஸ் மற்றும் விண்டோஸ்XP -யை நிறுவுவது எப்படி?


எனது கணினி 1 ஜி.பி ராம் மற்றும் 60 ஜி.பி. நிலைவட்டை கொண்டது. இதில் எவ்வாறு விண்டோஸ் XP யையும் லினக்சையும் நிறுவுவது என்று இப்போது பார்ப்போம்..
முதலில் விண்டோஸ்XP மென்பொருள் சி.டி யை வைத்து உங்கள் கணினியில் விண்டோஸ்XP -யை நிறுவிக்கொள்ளவும்
60 ஜி.பி. நிலைவட்டில் 10 ஜி.பி இடத்தை விண்டோஸ் XP-க்கு ஒதுக்கிவிட்டு மீதம் உள்ள இடத்தில் பிறகு லினக்சை நிறுவுவதற்காக பார்டிசியன் செய்யாமல் விட்டுவிட்டேன்.
விண்டோஸ் XP -யை முழுவதும் நிறுவியபிறகு உங்கள் கணினியை ரீபூட் செய்யவும்.
இப்போது பெடோரா லினக்ஸ் சி.டி-யை வைத்து அதே கணினியை பூட் செய்யவேண்டும்.
லினக்ஸ் நிறுவுவது எவ்வாறு என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.
எனவே நிறுவலின் போது வரும் நிலைவட்டு பகிர்தல் திரைக்கு வருவோம்...இங்கு மீதம் உள்ள 50 ஜி.பி இடத்தில் /boot பார்டிசியன்-க்கு 100 எம்.பி,swap பார்டிசியன்-க்கு 2 ஜி.பி, / ரூட் பார்டிசியன்-க்கு 20 ஜி.பி மற்றும் /home பார்டிசியன்-க்கு 25 ஜி.பி என பார்டிசியன்-களை உருவாக்கியுள்ளேன்.


இப்போது பூட் லோடர் கான்பிகுரேசன் திரை வரும்.இதில்தான் சில முக்கியமான செயல்களை செய்யவேண்டும்.ஏனென்றால் விண்டோஸ் XP பூட் லோடரால் பெடோரா லினக்ஸ்-ஐ உணர முடியாது. ஆனால் பெடோரா லினக்ஸ் பூட் லோடரால் -ஆல் விண்டோஸ் XP -யை உணர முடியும்.எனவே GRUB boot loader will be installed on என்பதை தேர்வு செய்துவிட்டு கட்டத்தில் உள்ள fedor core என்பதை தேர்வு செய்யவேண்டும்.
Next அழுத்தி பிறகு வரும் திரைகளில் தேவையான தகவலை கொடுத்து லினக்ஸ் நிறுவலை முடிக்கவும்.
கணினி ரீபூட் ஆனவுடன் இப்போது நமக்கு தெரிவது பூட் லோடர் திரையாகும்.
இங்கு Fedora Core என்பதை தேர்வு செய்தால் பெடோரா லினக்ஸ் பூட் ஆகும்.
WinXp அல்லது Other என்பதை தேர்வு செய்தால் விண்டோஸ் பூட் ஆகும்.

கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...

கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...


1.பிழைச்செய்தி:No Fixed Disk present:காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.
2.Error Reading Drive C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:1.வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.

6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.

7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.

8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.நினைவகத்தை மாற்றவும்.

9.Bad command are file name..
நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space
டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.

Samsung Galaxy S4

வெளியானது Samsung Galaxy S4 - முழு விவரங்கள் மற்றும் விலை


இந்த வருட ஆரம்பத்தில் இருந்து மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நேற்று வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும். 

இது 5 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, RGB light, Geomagnetic, Proximity, Gyro, Barometer Temperature & Humidity, Gesture ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.9 GHz Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில்   இது 1.6 GHz Octa-Core Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி 16/32/64 GB அளவில் இருக்கும். 64GB வரை microSD External Memory Card உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட். அத்தோடு RAM மற்றும் Processor இரண்டும் விலைக்கு உகந்ததாக உள்ளது. விலை 40,000 இருக்கக்கூடும். அதிக விலை கொடுத்து நல்ல போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது.

கூகுள்-ன் ருசிகரமான தகவல்கள்

கூகுள்-ன் ருசிகரமான தகவல்கள்

கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் அசகாய சூரன். 

இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.
1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).
2. கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.
3. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.
4. ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது. 
5. ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற “Don’t be evil” என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்.
6. கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது. 
7. கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது. 
8. இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.
                                                  
                                                     RR

தமிழ்நாடு அரசு ஆன்-லைன் மின் கட்டணம்

தமிழ்நாடு அரசு ஆன்-லைன் மின் கட்டணம்

தமிழக அரசு வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான மின் கட்டணத்தை இணையம் மூலம் செலுத்துவதற்கான ஆன்-லைன் சேவையை நேற்று துவக்கியது.இதன்மூலம் பொதுமக்கள் மின்கட்டணத்தை எளிதாக செலுத்தமுடியும்.தற்போது இது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்கத்தின் பிற பகுதிகள் விரைவில் இந்த சேவையை பெறலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.ICICI மற்றும் IOB வங்கி டெபிட் அட்டைகளுக்கு சேவை வரி கிடையாது என்ன தெரிவித்துள்ளனர்

http://www.tnebnet.org/awp/TNEB/

இலவச சேவை தொலைபேசி எண்கள்(கணினி வடிவமைப்பாளர்கள்)

இலவச சேவை தொலைபேசி எண்கள்(கணினி வடிவமைப்பாளர்கள்)

AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
LG - 1901 180 9999
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Samsung - 1800-110-011
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004

கூகிள் க்ரோம் புக்(chrom book)

கூகிள் க்ரோம் புக்(chrom book)

முகில் கணினியக ( cloud computing) தொழில்நுட்பத்தை கணினி பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையாக கொண்டுசொல்ல கூகிள் எடுத்திற்கும் அடுத்தகட்ட முயற்சி என்று சொல்லலாம்.


முகில் கணினியக தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தும் புதிய இயக்குதளத்தை(OS) கூகிள் நிறுவனம் வெளியிட உள்ளது.இதற்கு க்ரோம் ஒ.எஸ் என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த க்ரோம் ஒ.எஸ் நிறுவப்பட்டு வெளியிடப்படும் லேப்டாப்புகளை "க்ரோம் புக்" என்கின்றனர்.இந்த கணினிகள் இயங்க இணைய இணைப்பு மிக முக்கியம்.இணைய இணைப்பு இல்லாமல் உங்களால் எந்த ஒரு மென்பொருளையும் இயக்கமுடியாது.
சில சிறப்பம்சங்கள்:
இது 8 வினாடிகளில் பூட் ஆகக்கூடியது
நூற்றுக்கணக்கான இலவச ஆன்லைன் மென்பொருள்களை கொண்டது.தேவையான மென்பொருள்களை கூகிள் வெப்ஸ்டோர் -லிருந்து நிறுவிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பிற்கு 3G மற்றும் வை-ஃபை(wi-fi)தொழில்நுட்பம் உள்ளது
தகவல்கள் அனைத்தும் இணையத்திலே சேமிக்கபடுவதால் உலகில் எங்கிருந்தும் உங்கள் தகவலை எடுத்துக்கொள்ளாலம்

ஆண்டி-வைரஸ் மென்பொருள் தேவைபடாதவாறு வடிவமைத்துள்ளனர்.

கூகுள் CR48என்ற க்ரோம் புக் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 15 முதல் சாம்சங் மற்றும் ஏசர் இரண்டு நிறுவனங்களும் கூகுளுடன் இணைந்து க்ரோம் புக்-ஐ வெளிடுகின்றனர்.இது
நம் நாட்டில் இணையம் இப்போது பட்டிதொட்டியெல்லாம் இருந்தாலும் முழுவதும் இணைய இணைப்பை கொண்டு இயங்கும் கணினியின் பயன்பாடு இப்போது சாத்தியபடாது..இன்னும் சிலவருடங்கள் தேவை..

கூகுள் இன்டோர் (Google Indoor)

  கூகுள் இன்டோர் (Google Indoor)

வீதி வரை வந்த கூகுள் மேப் இப்போது வீட்டிற்குள் வந்துவிட்டது .ஆம் கூகுள் "Indoor" மென்பொருள் கொண்டு இப்போது விமான 0நிலையம்,ஹோட்டல்,சாப்பிங் மால்,திரையரங்கம்...,ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வரைபடங்களை பார்க்கமுடியும்.உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவரை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அவர் அந்த ஹோட்டலில் 5 ஆவது தளத்தில் 512 வது அறையில் இருக்கிறார் என்றால் இந்த வரைபடம் உதவியுடன் எளிதாக அவர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.கூகுள் ஆண்ட்ராயாடு செல்பேசிகளுக்கு இந்த மேப் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.

Month Wise Updates

Responsive Web Design

Responsive Web Design
staunchdesign

Best Domain Registration

Best Domain Registration
FREE DOMAIN

Best Website Creation

Best Website Creation
BEST WEB DESIGN COMPANY

Lowest Cost Web Hosting

Lowest Cost Web Hosting
BEST WEB HOSTING COMPANY
 
Support : Blogspot Design | SEO | Make Money
Copyright © 2013. Puthiya Sarithiram - All Rights Reserved
Template Designed by Ragupathi Maintained by Puthiya Sarithiram
Proudly powered by Blogger