MyAgileVps
Latest Post in Puthiya Sarithiram

Right Education System

Written By Unknown on Wednesday, 8 May 2013 | 03:49


Right Education System
 



நாம் பள்ளி, கல்லூரி, வேலை, தொழில் முயற்சி என்று சில படிக்கட்டுகளை வரையறுத்து வைத்திருக்கிறோம். அதன்படி செல்கிறவர்களைத்தான் மதிக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு அந்தப் படிகளில் ஒவ்வொன்றாக ஏறிச் செல்வதுதான் முறை என்று சொல்லித் தருகிறோம். இதை மீறி யாரேனும் லிஃப்டில் சென்று விட்டால்? பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி, தொழில் தொடங்கி பெரிய ஆளாகிவிட்டால்?

பிரச்சினையில்லை. நாம் அவர்களைப் பார்த்து வியப்போம். கை தட்டிப் பாராட்டுவோம். ஆனால், அதை ஒரு நல்ல வழியாக எண்ண மாட்டோம். ‘அவனுக்கு ஏதோ அதிர்ஷ்டம், ஜெயிச்சுட்டான். எல்லாராலும் முடியுமா?’ என்று சிறுமைப்படுத்தவும் தயங்க மாட்டோம். இந்த நிலை சமீபத்தில்தான் கொஞ்சம் மாறியிருக்கிறது. தொழில்முனைவோர் ஆவதற்கான வழிமுறைகளை, அனுபவங்களை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோம், அதுவும் கல்லூரியில்தான். மிகக் கவனமாக, ரிஸ்க் எதுவும் இல்லாமல் முன்னேறுவது எப்படி என்கிற போர்வையில்தான்.

அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ இந்தப் பிரச்சினையே கிடையாது. படிக்கும்போதே மாணவர்கள் பகுதி நேரமாக ஏதேனும் வேலை பார்ப்பது, நண்பர்களோடு சேர்ந்து சொந்தமாகத் தொழில் தொடங்குவது போன்றவை சகஜம். ‘முதல்ல படிப்பைக் கவனி’ என்று பெற்றோர், அதைத் தடை செய்கிற பழக்கம் இல்லை. இதுவும் ஒரு படிப்புதான் என்கிற மனோபாவமே அங்கு ஓங்கி நிற்கிறது. இதனால், பல மாணவர்கள் படிப்பைக் காட்டிலும் இந்தப் பகுதி நேரத் தொழில்களில் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். இதற்காகப் படிப்பை நிறுத்தி, முழு நேரத் தொழில் முனைவோர் ஆகி ஜெயித்தவர்கள் ஏராளம். ஒருவேளை, அந்தத் தொழில் முயற்சி எடுபடாவிட்டால்? ஆபத்தாயிற்றே!

பிரச்சினையில்லை. இந்த நாடுகளின் கல்வி முறை, இதனை ஊக்குவிக்கும் விதமாகவே அமைகிறது. படிப்பைத் தாற்காலிகமாக நிறுத்திவிட்டு, வேறு முயற்சியில் இறங்கலாம். அது சரிப்படாவிட்டால், திரும்பி வந்து பாடங்களைத் தொடரலாம். பட்டம் பெறலாம். வேலைக்குப் போகலாம்! ஆனால், பெரும்பாலான இளைஞர்கள் அதை விரும்புவதில்லை. ஆங்கிலத்தில், 'Entrepreneurial Itch' என்று சொல்வார்கள். அந்தத் துடிப்பு வந்துவிட்டால், ஒன்று சொதப்பினாலும் அடுத்தடுத்த முயற்சிகளைச் செய்து ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்குமே தவிர, ‘சேஃபாக’த் திரும்பி வந்து படிப்பைத் தொடரலாம் என்று தோன்றாது. எப்படியாவது முட்டி மோதி ஜெயித்து விடுவார்கள்.

குறிப்பாக, மென்பொருள் துறையில் இதுபோன்ற வெற்றிக் கதைகள் ஏராளம். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், யாஹு, கூகுள், ஃபேஸ்புக் என்று கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் சாதனை படைத்த பெரும்பாலான நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள், ‘பகுதி நேர புராஜெக்ட்’டாகத் தொடங்கியவை தான். அப்படியானால், படிப்பு முக்கியமே இல்லையா? மாணவர்களை நேரடியாகத் தொழில் முனைவோர் ஆக்கிவிடலாமா? அவசியமில்லை. பள்ளி, கல்லூரி, வேலை என்பது ஒரு பாதை என்றால், இதுபோன்ற பகுதிநேரத் தொழில் முயற்சிகளும், அவை முழு நேரமாக வளர்ச்சி பெறுவதும் இன்னொரு பாதை. அதைத் தேர்ந்தெடுக்கிறவர்களைத் திட்டித் தீர்த்துத் தரதரவென்று, ‘வழக்கமான’ பாதைக்கு இழுத்து வராமல் இருந்தாலே போதும்.

முன்பெல்லாம் பகுதி நேரத் தொழில் தொடங்க விரும்புகிறவர்கள், அதற்கென்று தனியே மெனக்கெட வேண்டும். கணிசமான பண முதலீடும் தேவைப்படும். அதற்குப் பயந்து கனவுகளைத் தள்ளிப்போடுகிறவர்கள் உண்டு. கம்ப்யூட்டர், மொபைல் போன்களுக்கான சாஃப்ட்வேர்கள் எழுதுவதில் அந்தப் பிரச்சினையும் இல்லை. இதற்குத் தேவையான  Development Tools பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன, வெள்ளிக்கிழமை ராத்திரி டவுன்லோடு செய்து, சனிக் கிழமை இணையத்திலேயே அதைப்பற்றி படித்துக் கற்றுக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை புரோகிராம் எழுதி, திங்கள்கிழமை வெளியிட்டுவிடலாம்.

இது கதை அல்ல. நிஜத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அதுவும் இந்தியாவில்! சந்தேகமிருந்தால் எந்தக் கல்லூரியிலும் நுழைந்து, கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள், பத்துக்கு நாலு பேர் புதுப்புது யோசனைகளோடு இருப்பார்கள். அதை புரோகிராமாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பார்கள். இன்னும் சிலர் ஏற்கெனவே சில சாஃப்ட்வேர்களை எழுதி வெளியிட்டிருப்பார்கள். அடுத்து என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். இப்படி எழுதி வெளியிடப்படும் எல்லா சாஃப்ட்வேர்களும் ‘சம்லி’போல் வெற்றி அடைந்து விடுமா? எல்லாரும் நிக் போல கோடீஸ்வரனாகி விடுவார்களா என்றால், இல்லை. ஆனால், இப்படியும் ஒரு வழி உண்டு என்பதை மாணவ சமுதாயம் புரிந்துகொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்கிறது.

‘
பாடப் புத்தகம்தான் முக்கியம். மற்ற எல்லாம் இரண்டாம்பட்சம் தான். படிக்கும்போது வேறு எதிலும் கவனத்தைத் திருப்பாமல் இருப்பதே நல்லது’ என்பது போன்ற பழைமைவாதச் சிந்தனைகள் நிறைந்த நம் நாட்டில், இதுவே மிகப் பெரிய மாற்றம். இப்படிப்பட்ட முயற்சிகள் நம் இளைஞர்களுக்கு ஒரு மாற்றுப் பாதையை உருவாக்கித் தரும். தெருவுக்குத் தெரு என்ஜினீயரிங் கல்லூரிகள் வந்துவிட்ட சூழல் இது. அநேகமாக எல்லாப் படிப்புகளிலும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இவர்கள் எல்லாரும் படிப்பை முடித்து வெளியே வரும்போது, மிக நன்றாகப் படித்துப் பிரமாதமான மார்க் வாங்கியவர்கள்கூட, நல்ல வேலைகளுக்குக் கடுமையாகப் போட்டி போட வேண்டியிருக்கும். எல்லாருக்கும் வேலை கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எந்தக் கல்லூரியில் பேசச் சென்றாலும் மாணவர்கள் மத்தியில் வலியுறுத்திச் சொல்வது ஒரு விஷயத்தைத்தான். ‘பகுதி நேரமாக ஒரு புராஜெக்ட் செய்யுங்கள். உங்கள் மனத்துக்குப் பிடித்த ஒரு விஷயத்தில் ஈடுபடுங்கள். மார்க்குக்காக ஏதேனும் ஒரு மொக்கை புராஜெக்டைத் தேர்ந்தெடுக்காதீர்கள். திருடாதீர்கள். காசு கொடுத்து வாங்காதீர்கள். நிஜமாகவே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய (அல்லது அப்படி நீங்கள் எண்ணக்கூடிய) ஒரு விஷயத்தை, பலர் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினைக்கான தீர்வை யோசித்துத் தேர்ந்தெடுத்து ஆர்வத்துடன் செய்யுங்கள். தனியாகவோ, நான்கைந்து பேர் குழுவாகச் சேர்ந்தோ அதில் ஈடுபடுங்கள். இதற்காக நீங்கள் தனியே விழுந்து புரண்டு சிரமப்பட வேண்டாம், ஓய்வு நேரத்தில் ஜாலியாகவே செய்யலாம்!’.

ஏனெனில், நாளைக்கு அதுதான் அவர்களுக்கு நல்ல வாசலாக அமையும். பட்டம், மதிப்பெண்கள், கேம்பஸ் இண்டர்வியூ போன்றவற்றையெல்லாம்விட, நிச்சயப் பலன், திருப்தியான, நிம்மதியான எதிர்காலத்தைத் தரக்கூடிய வழி இது. ஒருவேளை, இது உடனடியாகச் சரிப்படாவிட்டாலும்கூட, அந்த வழி மூடப்பட்டுவிடாது. கையில் படிப்பு இருக்கிறது. பட்டம் இருக்கிறது. வேலைக்குப் போய்க்கொண்டே தொடர்ந்து முயற்சி செய்யலாம். ஜெயிக்கலாம்.

முக்கியமாக, நம் இளைஞர்களிடையே இந்த வழி பரவலாகும்போது, அடுத்த ‘கூகுள்’ அல்லது ‘ஃபேஸ்புக்’ இந்தியாவிலிருந்து வரலாம். இங்கே ஐடியாக்களுக்கா       குறைச்சல்?
 

How to remove shortcut files

Written By Unknown on Thursday, 2 May 2013 | 08:41

How to remove shortcut files, remove shortcut files,   
 remove shortcut files in usb,
remove shortcut files in pen drive.


step0: Insert your pen drive
step1: Go to Run
step2: Type this Code
                             

                             attrib -h -r -s /s /d k:\*.*



step3:  Change your Drive latter from see your system allocated removable disk latter.
step4: Then click Enter
step5: remove shortcut files,

How to remove shortcut files


How to remove shortcut files, remove shortcut files,   
 remove shortcut files in usb,
remove shortcut files in pen drive.


step0: Insert your pen drive
step1: Go to Run
step2: Type this Code
                             

                             attrib -h -r -s /s /d k:\*.*



step3:  Change your Drive latter from see your system allocated removable disk latter.
step4: Then click Enter
step5: remove shortcut files,

+2 Results for 2013

Written By Unknown on Saturday, 27 April 2013 | 03:04


+2 results,plus two results ,12th  results.

 http://tnresults.nic.in/


 


 http://tnresults.nic.in/





http://tnresults.nic.in/

Google Chrome Keyboard Shortcuts

Written By Unknown on Friday, 26 April 2013 | 23:38

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts


Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம். 
  • Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய
  • Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய
  • Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.
  • Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
  • Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
  • Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல
  • Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல
  • Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல
  • Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.
  • Ctrl+W or Ctrl+F4 தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய.
  • Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல
  • Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
  • Alt+Home Home Page க்கு செல்ல
  • Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
  • Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
  • Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய
  • Ctrl+J Downloads page – ஐ ஓபன் செய்ய
  • Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய
  • F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
  • Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய
  • Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய
  • F1 Help Center – ஐ ஓபன் செய்ய
  • Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய
  • Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
  • Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
  • F5 or Ctrl+R Refresh செய்ய
  • Esc Loading – ஐ நிறுத்த
  • Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய
  • Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
  • Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
  • Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
  • F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
  • Space bar பக்கத்தை Scroll down செய்ய
  • Home பக்கத்தின் Top க்கு செல்ல
  • End பக்கத்தின் Bottom க்கு செல்ல

QR Code என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?

QR Code என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?

QR Code என்றால் என்ன? 

QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலக நாட்டினர் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாகும்.

Bard code & QR code

Bar Code பற்றிய நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்போம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியே QR Code ஆகும்.

QR Code-ம் பயனும்: 

  1. QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் (Encode) செய்யப்பட்டு ஒரு  படமாக கிடைக்கும். 
  2. அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 
  3. நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும். 
  4. அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து (டீகோட் Decode)செய்து , அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும்.
  5. உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும், இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி, மீண்டும் தேவையானபோது Decode  செய்து பெற முடியும்.

QR Code Image - ல் என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த முடியும்.?

QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், வலைத்தள முகவரிகள், SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data க்களை QR Code படமாக மாற்ற முடியும்.

QR Code Image - ஐ உருவாக்குவது எப்படி? 

QR Code Image -ஐ உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய இணையதளங்கள் (Online QR Code Websites) உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு தளத்திற்கு சென்று நீங்கள் உருவாக்க விருக்கும் இணைப்பு அல்லது தகவல்களை அதில் உள்ளிட்டு, QR Code Image - இமேஜைப் பெற முடியும். இது முற்றிலும் இலவசமே..

QR Code Image உருவாக்க இலவச மென்பொருள்களும் உள்ளன. அம்மென்பொருளைப் பயன்படுத்தியும் QR Code Image ஐ உருவாக்கம், QR Code Image -ல் உள்ளதை Decode செய்து படிக்கவும் முடியும்.

QR Code உருவாக்கப் பயன்படும் மென்பொருள்: 

1. Download QR Code Generator Software
2. Download QR Code Generator Software
3. Download QR Code Generator Software

உடனடியாக Online-ல் QR Code உருவாக்கப் பயன்படும் இணையதளங்கள்:

1. http://createqrcode.appspot.com/
2. http://keremerkan.net/qr-code-and-2d-code-generator/
இதுபோன்று நிறைய இணையத்தளங்கள் உள்ளன.

உருவாக்கப்பட்ட QR Code - ஐ Decode  செய்து தகவலைப் படிப்பது எப்படி? 

இதற்கு QR Code Reader என்ற மென்பொருள் பயன்படுகிறது. இணையத்தில் QR Code Reader வலைத்தளங்களும் உள்ளன.

இந்த தளத்திற்குச் சென்று http://www.onbarcode.com/scanner/qrcode.html உங்களுடைய QR Code Image - உள்ளிட்டு, அதில் உள்ள தகவல்களைப் பெற முடியும்.

QR Code Reader மென்பொருள் (Software) மூலமும் QR Code Image உள்ளவற்றை படித்து அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இம்மென்பொருளைப் பயன்படுத்தி QR Code உருவாக்க முடியும். உருவாக்கிய QR Code Image - படிக்கவும் முடியும்.

விண்டோஸ் கணினிக்கான மென்பொருள் இது. மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய.. இங்கு செல்லவும்.
qr code generating software

Change Windows7 Log-On Screen Back Ground,,,,!!!

Written By Unknown on Wednesday, 3 April 2013 | 23:30

Easy way to Change Windows7 Log-On Screen Back Ground,,,,!!!






 
If you do not like the Windows 7 login screen, you can change it as shown above by trying this simple hack.
Here is how you can do it.

1. Launch the Windows Registry Editor by typing Regedit in Start Menu

2. Go to ‘HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\Log ​​onUI\Background‘.

3. Double-click the DWORD value called ‘OEM Background’ to open it and enter 1 in the Value data field.

Note: If the DWORD ‘OEM Background’ is not there, you need to make it.

4. Browse to the background image that you would like
use on the log-in screen. A JPEG file that is less than 245 kb in size can only be used here.
 
5. Copy the image you want to use into the ‘%windir%\system32\oobe\info\backgrounds‘ folder. If the folder is not present, you need to create it.
6. Rename the image to backgroundDefault.jpg

7. Restart your computer to check the new login background screen.

Month Wise Updates

Responsive Web Design

Responsive Web Design
staunchdesign

Best Domain Registration

Best Domain Registration
FREE DOMAIN

Best Website Creation

Best Website Creation
BEST WEB DESIGN COMPANY

Lowest Cost Web Hosting

Lowest Cost Web Hosting
BEST WEB HOSTING COMPANY
 
Support : Blogspot Design | SEO | Make Money
Copyright © 2013. Puthiya Sarithiram - All Rights Reserved
Template Designed by Ragupathi Maintained by Puthiya Sarithiram
Proudly powered by Blogger