MyAgileVps
Home » » Right Education System

Right Education System

Written By Unknown on Wednesday 8 May 2013 | 03:49


Right Education System
 



நாம் பள்ளி, கல்லூரி, வேலை, தொழில் முயற்சி என்று சில படிக்கட்டுகளை வரையறுத்து வைத்திருக்கிறோம். அதன்படி செல்கிறவர்களைத்தான் மதிக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு அந்தப் படிகளில் ஒவ்வொன்றாக ஏறிச் செல்வதுதான் முறை என்று சொல்லித் தருகிறோம். இதை மீறி யாரேனும் லிஃப்டில் சென்று விட்டால்? பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி, தொழில் தொடங்கி பெரிய ஆளாகிவிட்டால்?

பிரச்சினையில்லை. நாம் அவர்களைப் பார்த்து வியப்போம். கை தட்டிப் பாராட்டுவோம். ஆனால், அதை ஒரு நல்ல வழியாக எண்ண மாட்டோம். ‘அவனுக்கு ஏதோ அதிர்ஷ்டம், ஜெயிச்சுட்டான். எல்லாராலும் முடியுமா?’ என்று சிறுமைப்படுத்தவும் தயங்க மாட்டோம். இந்த நிலை சமீபத்தில்தான் கொஞ்சம் மாறியிருக்கிறது. தொழில்முனைவோர் ஆவதற்கான வழிமுறைகளை, அனுபவங்களை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோம், அதுவும் கல்லூரியில்தான். மிகக் கவனமாக, ரிஸ்க் எதுவும் இல்லாமல் முன்னேறுவது எப்படி என்கிற போர்வையில்தான்.

அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ இந்தப் பிரச்சினையே கிடையாது. படிக்கும்போதே மாணவர்கள் பகுதி நேரமாக ஏதேனும் வேலை பார்ப்பது, நண்பர்களோடு சேர்ந்து சொந்தமாகத் தொழில் தொடங்குவது போன்றவை சகஜம். ‘முதல்ல படிப்பைக் கவனிஎன்று பெற்றோர், அதைத் தடை செய்கிற பழக்கம் இல்லை. இதுவும் ஒரு படிப்புதான் என்கிற மனோபாவமே அங்கு ஓங்கி நிற்கிறது. இதனால், பல மாணவர்கள் படிப்பைக் காட்டிலும் இந்தப் பகுதி நேரத் தொழில்களில் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். இதற்காகப் படிப்பை நிறுத்தி, முழு நேரத் தொழில் முனைவோர் ஆகி ஜெயித்தவர்கள் ஏராளம். ஒருவேளை, அந்தத் தொழில் முயற்சி எடுபடாவிட்டால்? ஆபத்தாயிற்றே!

பிரச்சினையில்லை. இந்த நாடுகளின் கல்வி முறை, இதனை ஊக்குவிக்கும் விதமாகவே அமைகிறது. படிப்பைத் தாற்காலிகமாக நிறுத்திவிட்டு, வேறு முயற்சியில் இறங்கலாம். அது சரிப்படாவிட்டால், திரும்பி வந்து பாடங்களைத் தொடரலாம். பட்டம் பெறலாம். வேலைக்குப் போகலாம்! ஆனால், பெரும்பாலான இளைஞர்கள் அதை விரும்புவதில்லை. ஆங்கிலத்தில், 'Entrepreneurial Itch' என்று சொல்வார்கள். அந்தத் துடிப்பு வந்துவிட்டால், ஒன்று சொதப்பினாலும் அடுத்தடுத்த முயற்சிகளைச் செய்து ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்குமே தவிர, ‘சேஃபாகத் திரும்பி வந்து படிப்பைத் தொடரலாம் என்று தோன்றாது. எப்படியாவது முட்டி மோதி ஜெயித்து விடுவார்கள்.

குறிப்பாக, மென்பொருள் துறையில் இதுபோன்ற வெற்றிக் கதைகள் ஏராளம். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், யாஹு, கூகுள், ஃபேஸ்புக் என்று கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் சாதனை படைத்த பெரும்பாலான நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள், ‘பகுதி நேர புராஜெக்ட்டாகத் தொடங்கியவை தான். அப்படியானால், படிப்பு முக்கியமே இல்லையா? மாணவர்களை நேரடியாகத் தொழில் முனைவோர் ஆக்கிவிடலாமா? அவசியமில்லை. பள்ளி, கல்லூரி, வேலை என்பது ஒரு பாதை என்றால், இதுபோன்ற பகுதிநேரத் தொழில் முயற்சிகளும், அவை முழு நேரமாக வளர்ச்சி பெறுவதும் இன்னொரு பாதை. அதைத் தேர்ந்தெடுக்கிறவர்களைத் திட்டித் தீர்த்துத் தரதரவென்று, ‘வழக்கமானபாதைக்கு இழுத்து வராமல் இருந்தாலே போதும்.

முன்பெல்லாம் பகுதி நேரத் தொழில் தொடங்க விரும்புகிறவர்கள், அதற்கென்று தனியே மெனக்கெட வேண்டும். கணிசமான பண முதலீடும் தேவைப்படும். அதற்குப் பயந்து கனவுகளைத் தள்ளிப்போடுகிறவர்கள் உண்டு. கம்ப்யூட்டர், மொபைல் போன்களுக்கான சாஃப்ட்வேர்கள் எழுதுவதில் அந்தப் பிரச்சினையும் இல்லை. இதற்குத் தேவையான  Development Tools பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன, வெள்ளிக்கிழமை ராத்திரி டவுன்லோடு செய்து, சனிக் கிழமை இணையத்திலேயே அதைப்பற்றி படித்துக் கற்றுக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை புரோகிராம் எழுதி, திங்கள்கிழமை வெளியிட்டுவிடலாம்.

இது கதை அல்ல. நிஜத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அதுவும் இந்தியாவில்! சந்தேகமிருந்தால் எந்தக் கல்லூரியிலும் நுழைந்து, கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள், பத்துக்கு நாலு பேர் புதுப்புது யோசனைகளோடு இருப்பார்கள். அதை புரோகிராமாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பார்கள். இன்னும் சிலர் ஏற்கெனவே சில சாஃப்ட்வேர்களை எழுதி வெளியிட்டிருப்பார்கள். அடுத்து என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். இப்படி எழுதி வெளியிடப்படும் எல்லா சாஃப்ட்வேர்களும்சம்லிபோல் வெற்றி அடைந்து விடுமா? எல்லாரும் நிக் போல கோடீஸ்வரனாகி விடுவார்களா என்றால், இல்லை. ஆனால், இப்படியும் ஒரு வழி உண்டு என்பதை மாணவ சமுதாயம் புரிந்துகொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்கிறது.

பாடப் புத்தகம்தான் முக்கியம். மற்ற எல்லாம் இரண்டாம்பட்சம் தான். படிக்கும்போது வேறு எதிலும் கவனத்தைத் திருப்பாமல் இருப்பதே நல்லதுஎன்பது போன்ற பழைமைவாதச் சிந்தனைகள் நிறைந்த நம் நாட்டில், இதுவே மிகப் பெரிய மாற்றம். இப்படிப்பட்ட முயற்சிகள் நம் இளைஞர்களுக்கு ஒரு மாற்றுப் பாதையை உருவாக்கித் தரும். தெருவுக்குத் தெரு என்ஜினீயரிங் கல்லூரிகள் வந்துவிட்ட சூழல் இது. அநேகமாக எல்லாப் படிப்புகளிலும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இவர்கள் எல்லாரும் படிப்பை முடித்து வெளியே வரும்போது, மிக நன்றாகப் படித்துப் பிரமாதமான மார்க் வாங்கியவர்கள்கூட, நல்ல வேலைகளுக்குக் கடுமையாகப் போட்டி போட வேண்டியிருக்கும். எல்லாருக்கும் வேலை கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எந்தக் கல்லூரியில் பேசச் சென்றாலும் மாணவர்கள் மத்தியில் வலியுறுத்திச் சொல்வது ஒரு விஷயத்தைத்தான். ‘பகுதி நேரமாக ஒரு புராஜெக்ட் செய்யுங்கள். உங்கள் மனத்துக்குப் பிடித்த ஒரு விஷயத்தில் ஈடுபடுங்கள். மார்க்குக்காக ஏதேனும் ஒரு மொக்கை புராஜெக்டைத் தேர்ந்தெடுக்காதீர்கள். திருடாதீர்கள். காசு கொடுத்து வாங்காதீர்கள். நிஜமாகவே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய (அல்லது அப்படி நீங்கள் எண்ணக்கூடிய) ஒரு விஷயத்தை, பலர் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினைக்கான தீர்வை யோசித்துத் தேர்ந்தெடுத்து ஆர்வத்துடன் செய்யுங்கள். தனியாகவோ, நான்கைந்து பேர் குழுவாகச் சேர்ந்தோ அதில் ஈடுபடுங்கள். இதற்காக நீங்கள் தனியே விழுந்து புரண்டு சிரமப்பட வேண்டாம், ஓய்வு நேரத்தில் ஜாலியாகவே செய்யலாம்!’.

ஏனெனில், நாளைக்கு அதுதான் அவர்களுக்கு நல்ல வாசலாக அமையும். பட்டம், மதிப்பெண்கள், கேம்பஸ் இண்டர்வியூ போன்றவற்றையெல்லாம்விட, நிச்சயப் பலன், திருப்தியான, நிம்மதியான எதிர்காலத்தைத் தரக்கூடிய வழி இது. ஒருவேளை, இது உடனடியாகச் சரிப்படாவிட்டாலும்கூட, அந்த வழி மூடப்பட்டுவிடாது. கையில் படிப்பு இருக்கிறது. பட்டம் இருக்கிறது. வேலைக்குப் போய்க்கொண்டே தொடர்ந்து முயற்சி செய்யலாம். ஜெயிக்கலாம்.

முக்கியமாக, நம் இளைஞர்களிடையே இந்த வழி பரவலாகும்போது, அடுத்தகூகுள்அல்லதுஃபேஸ்புக்இந்தியாவிலிருந்து வரலாம். இங்கே ஐடியாக்களுக்கா       குறைச்சல்?
 
Share this article :

Post a Comment

Responsive Web Design

Responsive Web Design
staunchdesign

Best Domain Registration

Best Domain Registration
FREE DOMAIN

Best Website Creation

Best Website Creation
BEST WEB DESIGN COMPANY

Lowest Cost Web Hosting

Lowest Cost Web Hosting
BEST WEB HOSTING COMPANY
 
Support : Blogspot Design | SEO | Make Money
Copyright © 2013. Puthiya Sarithiram - All Rights Reserved
Template Designed by Ragupathi Maintained by Puthiya Sarithiram
Proudly powered by Blogger