MyAgileVps

Written By Unknown on Wednesday, 3 April 2013 | 22:47

லினக்ஸ் வழங்கல்கள் (Linux Distribution)

லினக்ஸின் கருவை அடிப்படையாக கொண்டு மக்களின் எளிய பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் இயங்குதளங்கள் அனைத்தும் லினக்ஸ் வழங்கல்கள் என்று அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே சொன்னது போல் லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதனால் உலகெங்கும் இருக்கும் லட்சகணக்கான நிரலாளர்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக பலவிதமான மென்பொருள்களை வடிவமைத்து லினக்சை மேலும் மேலும் மெருகேற்றுகின்றனர்.
தொடக்க காலத்தில் ஒருவர் லினக்சை பயன்படுத்த வேண்டுமென்றால், யூனிக்ஸ் தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறிய மென்பொருளை நிறுவுவதற்கு, அதற்கு தேவையான கோப்புகளை எங்கே விப்பது,எத்தனை கட்டளைகளை இயக்க வேண்டும், இதற்கான நிரலை எங்கிருந்து இயக்கவேண்டும் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.
இதனால் லினக்ஸ் பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து சற்று விலகியே இருந்தது.
இலவசமாக கிடைக்கும் இந்த லினக்சை சாதரன மக்களும் எப்படி நிறுவுவது,பயன்படுத்துவது என்று எண்ணிய போதுதான் இந்த வழங்கல்கள் என்ற எண்ணக்கரு உருவானது என்று சொல்லலாம்.

தொடக்ககாலத்தில் உருவான வழங்கல்கள்:
MCC Interim Linux-இது 1992 ஆம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலை கழகத்தால் வெளியிடப்பட்டது.
1992-ல் SLS (Soft Landing Linux System) என்ற வழங்கலை A&M பல்கலை கழகத்தை சேர்ந்த ஒருவரால் வெளியிடப்பட்டது மேற்கண்ட எந்த வழங்கல்களும் சரியாக பராமரிக்கப்படாத்தால் பாதியிலே கைவிடப்பட்டது.
ஆனால் திரு.பேட்ரிக் வால்கர்டிங்(Patric Volkerding) என்பவர் SLS–யை அடிப்படையாகக் கொண்டு ஸ்லாக்வேர் என்ற வழங்கலை உருவாக்கினார்.இதுவே இன்றுவரை தொடர்ந்து வரும் மூத்த லினக்ஸ் ஆகும்.
தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட லினக்ஸ் வழங்கல்கள் உலகெங்கும் கிடைக்கின்றன.இதைப்பற்றி மேலும் தகவல்கள் அறிய கீழ்கண்ட இணையதளத்தை பார்வையிடவும்.
http://www.linux.org/dist
இப்போது பலராலும் பய்ன்படுத்தப்படும் லினக்ஸ் வழங்கல்களில் சில

பெஃடோரா (Fedora)
ரெட் ஹாட் (RedHat)
சுசே (Suse)
மாண்ட்ரிவா (Mandriva)
டெபியன் (Debian Linux)
உபுண்டு (Ubendu Linux)
நாப்பிக்ஸ் (Knoppix)
மற்றும் பல ...

டெபியன் லினக்ஸ்:இது டெபியன் ப்ராஜெக்ட் என்ற அமைப்பு மூலம் வெளியிடப் படுகிறது.இது 1993 –ம் ஆண்டு திரு.இயன்மர்டாக்(Ian Murdock) என்பவரால் முதலில் தொடங்கப்பட்டது.
DEBIAN என்பதில் DEB என்பது அவரது மனைவி பெயரான Debra என்பதிலிருந்தும் IAN என்பது அவரது பெயரிலிருந்தும் எடுத்த சொல்லாகும்.
இது முழுதும் இலவசமாக கிடைக்ககூடிய இயங்குதளமாகும்.
இதில் நிறுவப்படும் மென்பொருள்கள் dpkg என்ற மாதிரியில் இருக்கும்.dpkg என்றால் Debian Package என்பதன் சுருக்கம் ஆகும்.இதற்கு உலகெங்கும் லட்சக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால் இந்த டெபியன் லினக்சிற்கு 15,000 க்கும் அதிகமான இலவச மென்பொருள்கள் கிடைக்கின்றன.டெபியன் லினக்சை பதிவிறக்கம் செய்ய என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

உபுண்டு லினக்ஸ்இது டெபியன் லினக்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளம்.இதில் பயன்படுத்தப்படும் எல்லா மென்பொருள்களும் க்னூ-வின் கட்டற்ற மென்பொருள் ஆகும்.இதன் புதிய பதிப்பு ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் உபுண்டு பதியப்பட்ட குறுவட்டுகளை (சி.டி) தபால் மூலம் பெறுவதற்கு நாம் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.இதற்கு திரு.மார்க் ஷட்டில்வர்த்(Mark Shuttle Worth) என்பவருடைய கனோனிகல்(Cononical Ltd) நிறுவனம் உதவுகிறது.இவை மேல்மேசை மெற்றும் மட்க்கணினிகளுக்கு சிறப்பான் ஆதரவை வழங்குகின்றது.
உபுண்டு என்ற ஆப்பிரிக்க சொல்லுக்கான் பொருள் மானுட நேயம் ஆகும்.உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய்மொழியில் இலவசமாக கிடைக்க கூடிய இயங்குதளமாக இது அமையும்.
உபுண்டு தவிர கே உபுண்டு,எக்ஸ் உபுண்டு,எடுபுண்டு,கோபுண்டு என பதிப்புகளில் வெளிவருகிறது.உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் லினக்ஸ் வழங்கல் இதுவாகும்.
உபுண்டு லினக்ஸ் சி.டி-யை இலவசமாக பெற...
உபுண்டு லினக்சை நிறுவும் கையேடு-தமிழில்
கேஉபுண்டு லினக்சை நிறுவும் கையேடு-தமிழில்

நாப்பிக்ஸ் லினக்ஸ்இதுவும் டெபியன் லினக்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளம்.இதன் சிறப்பு என்னவென்றால்,இது நேரலை குறுவட்டு (Live CD) லினக்ஸ் ஆகும்.அதாவது உங்கள் கணினியில் நிறுவாமல் தற்காலிகமாக லினக்சை பயன்படுத்தி பார்க்கமுடியும்.மேலும் விளக்கமாக கூற வேண்டுமானில், கணினியின் வன்தட்டில் லினக்சை நிறுவாமல் இந்த குறுந்தகடு மூலம் கணினியை பூட் செய்து தற்காலிகமாக லினக்சை பயன்படுத்திக்கொள்ளலாம்.தேவையில்லை என்றால் குறுந்தகடை எடுத்து நம் வன்தகட்டிலிருந்து பூட் செய்துகொள்ளலாம்.இந்த லினக்சை பதிவிறக்கம் செய்ய http://www.knoppix.org
என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

ரெட் ஹாட்/பெஃடோரா லினக்ஸ்:
ரெட் ஹாட் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இதன் ஒன்பதாவ்து பதிப்பிற்க்கு பிறகு 2003-ம் ஆண்டு இது இரண்டு பிரிவானது.1. பெஃடோரா லினக்ஸ் 2. ரெட் ஹாட் லினக்ஸ்.
பெஃடோரா(Fedora) குழுமம் லினக்சை வடிவமைத்து வெளியிடுகிறது.இதற்கு ரெட் ஹாட் நிறுவனம் உதவுகிறது.இந்த பெஃடோரா லினக்ஸ் வீடு மற்றும் சிறிய அலுவலக பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்படுகிறது.
ரெட் ஹாட் லினக்ஸ் பெஃடோராவை அடிப்படையாக கொண்டு சர்வர் கணினிகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் லினக்ஸ் ஆகும்.இதை ரெட் ஹாட் என்டர்ப்ரைஸ் லினக்ஸ் (RedHat Enterprise Linux) என்பர்.இதன் உரிமம் இலவசமாக கிடைக்காது. விலை கொடுத்து வாங்கவேண்டும்.
பெஃடோரா லினக்சை நிறுவும் கையேடு – தமிழில்..

சூசே லினக்ஸ்:
இதுவும் ஒரு புகழ்பெற்ற லினக்ஸ் வழங்கள் ஆகும். SUSE என்பது Software and Systems Entwicklung என்ற ஜெர்மனி சொல்லிலிருந்து வந்தது.இதற்கு தகுந்த ஆங்கில சொல் Software and System Development. இப்போது இந்த சூசே லினக்ஸ் நாவல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.ரெட் ஹாட்-ல் உள்ளது போல் மேல்மேசை கணினிகளுக்கு என்று ஒரு இலவச வெளியீடும் பெரிய அலுவலக கணினிகளுக்கு விலை கொடுத்து வாங்ககூடிய வெளியீடுகளும் உள்ளது.சான்றாக சூசே லினக்ஸ் என்டர்ப்ரைஸ்
சூசே கணினிகளின் வன்பொருள் மற்றும் மென்பொருள்களை மேலாண்மை செய்ய Yast என்ற மென்பொருள் கருவி பயன்படுத்தப்படுகிறது.
http://www.novell.com/linux/

மாண்ட்ரிவா லினக்ஸ்இதன் பழைய பெயர் மாண்ட்ரேக்(Mandrake) ஆகும்.1998-ம் ஆண்டு பிஃரான்சில்(France) ரெட் ஹாட் லினக்சை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்ட லினக்ஸ்.இதிலும் ரெட் ஹாட் போல் மேல்மேசை கணினிகளுக்கு என்று ஒரு இலவச வெளியீடும் பெரிய அலுவலக கணினிகளுக்கு விலை கொடுத்து வாங்ககூடிய வெளியீடுகளும் உள்ளது.இதில் உள்ள (Smart Package Manager) மற்ற லினக்ஸ் வழங்கல்களின் மென்பொருள்களை ஆதரித்து நிறுவும் திறனுடையது.
அதாவது ரெட் ஹாட் என்றால் rpm மாதிரி மென்பொருள்கள், டெபியன் என்றால் dpkg மாதிரி மென்பொருள்கள்,இவை அனைத்தையும் இது ஆதரிக்கும்.அது மட்டுமல்லாமல் Mandriva Control என்ற கருவியின் மூலம் கணினியின் வன்பொருள்/மென்பொருள்களை மேலாண்மை செய்ய முடியும்.

http://www.mandriva.com/
Share this article :

Post a Comment

Responsive Web Design

Responsive Web Design
staunchdesign

Best Domain Registration

Best Domain Registration
FREE DOMAIN

Best Website Creation

Best Website Creation
BEST WEB DESIGN COMPANY

Lowest Cost Web Hosting

Lowest Cost Web Hosting
BEST WEB HOSTING COMPANY
 
Support : Blogspot Design | SEO | Make Money
Copyright © 2013. Puthiya Sarithiram - All Rights Reserved
Template Designed by Ragupathi Maintained by Puthiya Sarithiram
Proudly powered by Blogger